தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ஏதேனும் அறிவிப்புகள் தமிழக அரசின் சார்பில் எழுப்பப்படுமா என மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில், வருகிற பிப்ரவரி 5-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




