அண்ணா நினைவு தினத்தில் கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா என்கின்ற நல்ல பசுமாடு மீது உட்கார்ந்திருக்கின்ற காக்காவாக தான் திமுக ஆட்சி இருக்கிறது. மக்களை பிடுங்கி சாப்பிடக் கூடிய ஆட்சியாக இருப்பதாக விமர்சனம்.
மேலும், அண்ணாவின் குடும்பம் அரசியல் பக்கமே வரவில்லை. ஆனால் முதல்வர், அவரது மகன், பேரன் வந்து கொண்டு அண்ணா வழியை பின்பற்றுகிறோம் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. அண்ணாவின் ஆட்சியில் ஊழல் இல்லை, ஆனால் இன்று எல்லா இடத்திலும் ஊழல் இருப்பதாக திமுக ஆட்சியை விமர்சனம் செய்தார்.




