மத்திய அரசில் 61,000 பேருக்கு வேலைக்கான நியமன கடிதம்: பிரதமர் மோடி வழங்கினார்

இதுவரை தமிழக வெற்றிக் கழகம் குறித்து மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்த அதிமுக, தற்போது கடும் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் நோக்கம் என்ன?

புதுடெல்லி: நாடு முழு​வதும் 45 இடங்​களில் நேற்று வேலை​வாய்ப்பு திரு​விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் மோடி காணொலி முறை​யில் பங்​கேற்று 61,000 பேருக்கு மத்திய அரசு வேலைக்​கான நியமன கடிதங்​களை வழங்​கி​னார்.

மத்​திய அரசு சார்​பில் ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் வேலை​வாய்ப்பு திரு​விழா நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதில் அரசின் பல்​வேறு துறை​களில் காலி பணி​யிடங்​களை நிரப்ப தகு​தி​யான நபர்​களுக்கு நியமன கடிதங்​களை பிரதமர் மோடி வழங்கி வரு​கிறார். மற்ற மாநிலங்களில் அமைச்சர்கள் நியமன கடிதங்களை வழங்கி வருகின்றனர்.

இந்​நிலை​யில் 18-வது வேலைவாய்ப்பு திரு​விழா நாடு முழு​வதும் 45 இடங்​களில் நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் மோடி காணொலி முறை​யில் பங்​கேற்று 61,000 பேருக்கு நியமன கடிதங்​களை வழங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

உலகிலேயே இளைஞர்​களை அதி​கம் கொண்ட நாடு இந்​தி​யா. அவர்​களுக்​காக பல நாடு​களு​டன் இந்​தியா வர்த்தக ஒப்​பந்​தம் செய்​கிறது. இந்த வர்த்தக ஒப்​பந்​தங்​கள் நாட்​டில் உள்ள இளைஞர்​களுக்கு புதிய வாய்ப்​பு​களை கொண்டு வரு​கின்​றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *