மம்மூட்டி, சிவசங்கரி, மாதவனுக்கு பத்ம விருதுகள் – முழு விவரம்

சென்னை: 2026-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், எழுத்தாளர் சிவசங்கரி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ்நாட்டின் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசுவாமி, மருத்துவத் துறை, எஸ்கேஎம் மயிலானந்தன் – சமூகசேவை, காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன் – கலை, எச்.வி.ஹண்டே – மருத்துவம், கே.ராமசாமி – அறிவியல் மற்றும் பொறியியல், கே.விஜயகுமார் – குடிமைப் பணிகள், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் – கலை, மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன் – கால்நடை மருத்துவம், நீலகிரி ஆர்.கிருஷ்ணன் (மறைவுக்குப் பின்) – கலை, ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் – கலை, சிவசங்கரி – இலக்கியம் மற்றும் கல்வி, திருவாரூர் பக்தவச்சலம் – கலை, வி.காமகோட்டி – அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பழனிவேல் என்பவருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *